கல்வெட்டு நடைமுறையை ஸ்டாலின் நடத்தி காட்டுகிறார் : வைகோ

கல்வெட்டு நடைமுறையை    ஸ்டாலின் நடத்தி காட்டுகிறார் : வைகோ
X
கல்வெட்டு நடைமுறைகளை தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக பிரசாரத்தில் வைகோ பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலவாக்கம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் க.சுந்தரை ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

தனது பரப்புரையில் , ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரித்திரப் புகழ்பெற்ற உத்தரமேரூரில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டும். அந்த அமைப்பில் போட்டியிட அவர்களின் நடத்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என கல்வெட்டில் எழுதி வைத்துள்ளனர்.

தற்போதைய திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டங்கள் மூலம் இதை செயல்முறைப்படுத்தி காட்டியுள்ளார் . இது போன்று பல செயல்களை திறன்பட செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தமிழகம் வளம் பெற செய்ய வேண்டுமெனில் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai business transformation