கொரோனா தடுப்பூசி போடுங்கள்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி போடுங்கள்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
X
கொரோனா இரண்டாவது அலை துவங்கியுள்ளதால் தொண்டர்கள் , பொதுமக்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள் என தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்தார்.

இவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் வந்த நிலையில் 20 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிந்திருந்தனர். இதனை கவனித்த ஸ்டாலின், கொரோனா இரண்டாவது அலை தற்போது துவங்கியுள்ளதால் தொண்டர்கள், பொதுமக்கள் அவசியம் முகம் கவசம் அணிய வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அத்துடன் ஊசி செலுத்தி கொண்டால் காய்ச்சல் வரும் என பயம் வேண்டாம். நானே செலுத்தி கொண்டு ஆரோக்கியத்துடன் உள்ளதால் உங்கள் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தார். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை கருத்தில் கொண்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags

Next Story
ai in future agriculture