வேட்பாளருக்கு நேரில் ஆதரவு- அரசுஊழியர் சஸ்பெண்ட்

வேட்பாளருக்கு நேரில் ஆதரவு- அரசுஊழியர் சஸ்பெண்ட்
X

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் ஒன்றியம் , சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் தேர்தல் விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவர் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் சுந்தரை தனது கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக தேர்தல் அலுவலருக்கு‌ ஆதாரபூர்வமாக புகார் வந்தது.இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விசாரணை நடத்தியதில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!