காதலியின் கண்முன்னே காதலன் தூக்கிட்டு தற்கொலை: பரபரப்பு

காதலியின் கண்முன்னே காதலன் தூக்கிட்டு தற்கொலை: பரபரப்பு
X

பைல் படம்

வாலாஜாபாத் அருகே காதலியின் கண்முன்னே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரகமணி என்பவரின் மகன் ஜெகதீஷ். இவர் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பக்கம் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகளான சந்தியா என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தார்.

இவர்களுடைய காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பேசவில்லை. இந்நிலையில் ஜெகதீஷ் சந்தியாவை வாலாஜாபாத் அடுத்த கம்பராஜபுரம் பகுதியில் உள்ள நாவல் மர தோப்பிற்கு அழைத்துசென்று பேசி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் வாய் சண்டை ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் இருவருக்கும் முற்றிய நிலைமில் சந்தியாவின் துப்பாட்டாவை பறித்து சற்றும் எதிர்பாராத வகையில் அருகில் இருந்த நாவல் மரத்தில் தூக்கு மாட்டி கொண்டுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த சந்தியா அவரை காப்பாற்ற இயலாத நிலையில் உதவி கேட்க சாலையில் வந்து அவ்வழியாக வந்தவர்களை உதவிகேட்டு சென்று பார்த்தபோது ஜெகதீஷ் இறந்தநிலையில் இருந்து உள்ளார்.

இதுகுறித்து மாகரல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கபட்டதின் பேரில் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உன் குறித்து சந்தியாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியின் துப்பட்டாவில் காதலன் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!