ஊரடங்கை பின்பற்றுவதில் முன்மாதிரியாக விளங்கும் ஆர்ப்பாக்கம் கிராமம்

ஊரடங்கை பின்பற்றுவதில் முன்மாதிரியாக விளங்கும் ஆர்ப்பாக்கம் கிராமம்
X

ஊரடங்ககு விதிகளை மதிப்பதில்  முன்மாதிரியாக விளங்கும் ஆர்ப்பாக்கம் கிராமம்

ஊரடங்கு அமல்படுத்திய நிலையில் சுகாதார பணி‌ மற்றும் விதிகளை பின்பற்றுவதில் நகரங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் ஆர்ப்பாக்கம் கிராமம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி நாள்தோறும் ஆயிரக்கானக்ணோர் பாதிக்கப்பட்டு வருவதை கண்டு நேற்று முதல் முழு தளர்வுகளற்ற ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்நிலையில் நகரங்களில் ஏதாவது ஒரு காரணம் கூறி பொதுமக்கள் சுற்றித் திரிவதால் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகளை கிராமங்களே முழுமையாக பின்பற்றி வருகின்றன . இதில் குறிப்பாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் கிராமம், அனைத்து கிராமங்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.

பிரதான கூட்டு சாலையில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் விதிமுறைகளைக் கூறும் ஒலிபெருக்கிகள் , காலையில் வீதிகள் தோறும் தூய்மைப்பணி , அதைத் தொடர்ந்து கிருமிநாசினி , பிளீச்சிங் பவுடர் தெளித்தல் , கிராம வீதிகள் முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்பால் வெறிச்சோடி காணப்படுகிறது.

காய்கறி பழவகை மற்றும் மளிகை வாகனங்கள் வரும்போது மட்டுமே பொருட்களை வாங்க வெளியே முகக்கவசம் அணிந்து பொருட்களை வாங்கி செல்வது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி நகரங்களுக்கு முன்மாதிரியாக இந்த கிராமம் விளங்கி வருகிறது.

இதேபோல் பல்வேறு கிராமங்களும் தங்களைப் சுயகட்டுப்பாட்டுடன் கொரோனா விதிமுறைகளை செயல்படுத்துகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்