உத்திரமேரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை பணம் கொள்ளை: மர்ம நபர்கள் அட்டூழியம்

உத்திரமேரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை பணம்  கொள்ளை:  மர்ம நபர்கள் அட்டூழியம்
X

உத்திரமேரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.

உத்திரமேரூர் அருகே அதிகாலை அதிமுக பிரமுகர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து 12சவரன் நகைகளை பறிபத்து கொண்டும், ரூபாய் 8000 எடுத்துக் கொண்டும் சென்றுள்ளனர். இதுகுறித்து பெருநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் தங்க பஞ்சாட்சரம். இவர் உத்திரமேரூர் மத்திய ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்கள் முன்பு கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்தால் வீட்டின் ஒரு பகுதியில் தனிமையில் உள்ளார்.

இந்நிலையில் இவரது மனைவி கீழ் தளத்திலும், மகன் மற்றும் மருமகள் மேல் தளத்திலும் உணவருந்தி படுத்திருந்த நிலையில், வீட்டின் பின்பக்கமாக வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ள சென்று TV அருகே இருந்த பணம் ரூபாய் 8000/- எடுத்து கொண்டு, தெய்வநாயகி கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு மற்றும் செயின் மொத்தம் 12 சவரன் பறித்துள்ளனர்.

அப்போது சத்தபோட்டு திருடனை பிடிக்க முயற்சித்த போது தாலி சரடு அறுந்தால் மர்ம நபர்கள் தப்பியோடினர்.

இதன்பின் சம்பவம் குறித்து பெருநகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் காவல்துறையினர் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!