விவசாய நிலம் அழிப்பு-விவசாயிகள் கவலை

விவசாய நிலம் அழிப்பு-விவசாயிகள் கவலை
X
நெற்பயிர்களை அழித்த எண்ணெய் நிறுவனங்கள் செய்கையால் உத்திரமேரூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அறுவடைக்கு சில காலமே உள்ள நிலையில் நெற்பயிர்களை அழித்த எண்ணெய் நிறுவனங்கள் செய்கையால் உத்திரமேரூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 9 வது வார்டு மல்லியங்கரணை மதுரா பகுதியில் விவசாய விளை நிலங்கள் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றன. இங்கு எண்ணெய் நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புகளுமின்றி கதிர் முற்றிய, அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில் இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் விவசாய பயிர் நிலங்களை அழித்து பூமிக்கடியில் பைப் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நெற்கதிர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி எண்ணெய் நிறுவனங்கள் அழித்து பள்ளம் தோண்டியதாக கூறிய விவசாயிகள் செய்வதறியாது வேதனை அடைந்தனர். வேகமாக அழிந்து வரும் விவசாய தொழிலை பெருத்த நஷ்டத்திலும், நாங்கள் எங்கள் மூதாதையர் காலம் தொட்டு, செய்து வருகிறோம். இது போன்ற செயல்களினால் வாழ்வாதாரம் , பொருளாதார இழப்பையும், நாங்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தங்களுக்கு மத்திய, மாநில, அரசுகள் உரிய நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!