மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் துவக்கம்

மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் துவக்கம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020 -2021 ன் கீழ் மீன் உற்பத்தியை அதிகரிக்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை குளங்களில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்திற்காக ரூ. 1 கோடியே ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் மதிப்பில் 15 ஹெக்டேர் பரப்பளவில் 75 ஆயிரம் மீன்குஞ்சு விரலிகள் வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 பெரிய குளங்களில் இருப்புச் செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நன்கு வளர்ந்த இந்தியப் பெருங்கெண்டை மீன் குஞ்சு விரலிகள் ஹெக்டேர் ஒன்றுக்கு 5000 வீதம் மாவட்டத்தில் 15 ஹெக்டேர் இருப்பு செய்யும் திட்டத்தினை இன்று வாலாஜாபாத் ஒன்றியம் , புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார்குளத்தில் 4 ஆயிரம் மீன்குஞ்சு விரலிகளை குளத்தில் விட்டு கிராம மக்களுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.

கிராம மக்களுக்கு புரத உணவு கிடைக்கும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி மீன்வள உற்பத்தியினை பெருக்கிடும் வகையிலும் மீன்வளத்துறை சார்பாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதபுரி , மீன்வளத்துறை அலுவலர்கள் ஜான் பெக்கர் , பர்குணம் , கிராம ஊராட்சி செயலர் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!