ஸ்ரீபெரும்புதூர் வாக்குசாவடி செல்லும் வாகனம் மாற்றம் : பணிகள் பாதிப்பு

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வாக்கு சாவடிகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மாற்றுவதால் தேர்தல் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் நடைபெறுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு சாவடிக்கு செல்ல வேண்டிய பொருட்களை ஏற்றிசெல்ல சிறிய கூண்டற்ற லாரிகள் காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடீரென மழை பொழிய வாய்ப்பு இருப்பதால் தேர்தலுக்கான பொருட்களை ஏற்றி செல்லுதல் மற்றும் பதிவான வாக்குப் பெட்டிகளை எடுத்து வரும் நிலையில் கனமழை பெய்ய துவங்கினால் அனைத்தும் வீணாகும் என எண்ணி இந்த வாகனங்களை மாற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முடிவு செய்தது.

கூண்டற்ற லாரிகளில் ஏற்றிய பொருட்களை ஊழியர்கள் இறக்கி லாரிகளில் திருப்பி அனுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு மண்டலத்திற்கும் கூட வாக்குசாவடி பொருட்கள் ஏற்றவும் இல்லை , செல்லவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லாரி ஓட்டுனர்கள் , பொருட்களை ஏற்றி வந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.

முதல் கட்ட வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் கூண்டு வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!