மின் ஒயர் அறுந்து விழுந்து இரு வட மாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு
பைல் படம்.
வங்க கடலில் தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்திருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
நேற்று மாலை முதலே பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கி அதிகாலை வரை கனமழை மாவட்டம் முழுவதும் பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் - 133.00 மி.மீ. , குன்றத்தூர் - 147.40 மி.மீ , செம்பரம்பாக்கம் - 107.20 மி.மீ என ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதலே பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
பல இடங்களில் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்ததால் மின்கம்பங்களும் சேதமடைந்தது. அதிக காற்று வீசுவதால் நேற்று இரவு 10 மணி முதல் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையில் இன்றி வெளியே ஆபத்தான நிலையில் சந்திக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில் தனியார் மழலை பள்ளி ஒன்று உள்ளது. மாண்டஸ் புயலின் காரணமாக நேற்று இரவு வீசிய பலத்த காற்றில் தனியார் மழலை பள்ளியில் உள்ள மரம் ஒன்று முறிந்து மின்சார ஒயரில் விழுந்து மின்சார ஒயர் தரையில் கிடந்துள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் யாரும் கவனிக்காததால் இது குறித்த தகவல் ஏதும் மின்சார வாரியத்துக்கு தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில்பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இரண்டு வட மாநில வாலிபர்கள் வேலை முடித்துவிட்டு அவ்வழியாக சென்ற பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை அதைப் பார்த்த பிள்ளை பாக்கம் கிராம மக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரதேதத்தை கைப்பற்றி இறந்தது யார் என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என தெரிந்தும் மின்சாரத் துறையினர் மின் இணைப்பை மாவட்டத்தின் பல பகுதிகளில் துண்டித்திருந்த நிலையில் இப்பகுதியில் மின்சார வாரிய ஊழியர்கள் அலட்சியமாக இருந்து துண்டிக்காததால் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையோடு கூறுகின்றனர்.
பலத்த சூறைக்காற்று வீசியும் அதற்கான எச்சரிக்கை விடுத்தும் பொது மக்களும் மின்சார ஊழியர்களும் என இரு தரப்பிலும் அலட்சியத்தை காட்டியதில் இரு உயிர்கள் பறிபோனது மட்டுமே நடந்துள்ளது.
இந்நிலையில் புயல் கடந்தாலும் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது சாரல் மழை தொடர்ச்சியாக மேலும் இது மூன்று நாட்களுக்கு இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu