ஸ்ரீபெரும்புதூர்: கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக நிர்வாகி கைது

ஸ்ரீபெரும்புதூர்: கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக நிர்வாகி கைது
X

கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி பி.பி.ஜி.டி.சங்கர்

வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக மாநில பட்டியலின பொருளாளருமான பி.பி.ஜி.டி.சங்கர், ஜோதி என்பவரை கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜிடி.சங்கர்.இவர் தற்போது பாஜக மாநில பட்டியலின பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த ஜோதி என்பவர் ஜே.பி.ஸ்டோர் ஏஜென்சி என்ற பெயரில் சிட்பண்ட் நடத்தி வருவதாகவும். இதில் சத்தியமூர்த்தி என்பவருக்கும் ஜோதிக்கும் 8 கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி அன்று மதியம், வளர்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஜோதியை அழைத்து நீ இனிமேல் சத்தியமூர்த்தியிடம் பணம் கேட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று பி.பி.ஜிடி.சங்கர் மிரட்டியதாகக் கூறி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பிபிஜிடி.சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்