தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை நீட்டிப்பு, ஆட்சியர்

தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை  நீட்டிப்பு, ஆட்சியர்
X

காஞ்சிபுரத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ( பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 04.08.2021 இரவு 11.59 வரை இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

அதன்படி. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும்.

1. Mechanic Motor Vehicle (SCVT) கம்மியர் மோட்டார் வாகனம்,

2.Mechanic Refrigeration and Air-Conditioning Technician (SCVT) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர்

3.Electronics Mechanic (SCVT) கம்மியர் மின்னணுவியல்

4.Technician Mechatronics (SCVT) இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர்

ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டுகால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும். Welder (SCVT) பற்றவைப்பவர் பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் எதுமில்லை.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.750/ , விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, இரண்டு செட் சீருடைக்கான துணி மற்றும் தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷூ, இலவச பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதல்வர். அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஓரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 94999 37448 / 63790 90205. என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!