ஸ்ரீபெரும்புதூர் நிவாரண முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு பேரூராட்சி மூலம் மதிய உணவு வழங்கல்..
நிவாரண முகாமில் பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் மதிய உணவு அளித்தார்.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 முகாம்களில் சுமார் 2240 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 47 குடும்பங்களை சேர்ந்த 35 ஆண்கள் 45 பெண்கள் 42 குழந்தைகள் என மொத்தம் 122 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை பொதுமக்களுக்கு பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் இந்திராணி சுப்பிரமணி, மூன்றாவது வார்டு கவுன்சிலர் நர்மதா மோகன கிருஷ்ணன், 14 ஆவது வார்டு கவுன்சிலர் சுதாகர் ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாய், தலையணை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியும், மதிய உணவையும் வழங்கினர்.
இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 7 ஆவது வார்டில் மாண்டஸ் புயல் வருவதையொட்டி குடிசை மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்கள், இருளர் இன மக்களை அழைத்து வந்து ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து முகாமில் உள்ள மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேலைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஏழாவது வார்டு கவுன்சிலர் பார்வதி குப்புசாமி உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஓன்றியத்திற்குபட்ட உட்பட்ட பென்னலூர், சோகண்டி, மகாதேவி மங்கலம் , ஏகனாபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் 40 குடும்பங்களை சேர்ந்த 43 ஆண்கள், 48 பெண்கள், 39 குழந்தைகள் என 130 நபர்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் 13 முகாம்களில் 126 குடும்பங்களை சேர்ந்த 494 நபர்களும், வாலாஜாபாத் வட்டத்தில் 18 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 13 குடும்பங்களை சேர்ந்த 450 பேரும், உத்திரமேரூர் வட்டத்தில் 11 நிவாரண முகாம்களில் 115 குடும்பத்தை சேர்ந்த 334 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஒன்பது நிவாரண முகாம்களில் 162 குடும்பங்களை சேர்ந்த 51 நபர்களும், குன்றத்தூர் வட்டத்தில் 14 நிவாரண முகாம்களில் 140 குடும்பத்தை சேர்ந்த 457 நபர்கள் என மொத்தம் ஐந்து வட்டங்களில் 65 மையங்களில் 2240 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu