ஸ்ரீபெரும்புதூர் அருகே முதியவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் அருகே  முதியவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
X

கொள்ளை நடைபெற்ற வீட்டில்  காவல்துறையினர்  விசாரணை நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர் சித்தூர் கிராமத்தில் 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 70 வயதான மோகன் மற்றும் புஷ்பா தம்பதியர்.

இவர்கள் இருவருக்கும் செவித்திறன் பாதிப்பு இருந்து வந்துள்ளது. மோகன் தன் வீட்டிலேயே சிறிதாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்கி கொண்டு இருந்த போது திடீரென விழித்து பார்த்ததில் வீட்டின் உள்ளே இருந்த அறையில் துணிகள் மற்றும் பாத்திரங்கள் கலைந்து உள்ளது

மேலும் பின்புற கதவு உடைக்கப்பட்டு உள்ளது.முதியவர்கள் ஆராய்ந்ததில் இவர்களுக்கு சொந்தமான 4 மோதிரங்கள் 1செயின் 2 வளையல்கள் மற்றும் சேமிப்பு பணம் 50000 ரொக்கம் களவு போனது என தெரியவந்தது.

உடனே சென்னையில் உள்ள தனது மகனுக்கு தகவல் அளித்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே இதே பகுதியில் உள்ள இரு வீட்டில் செல்போன்கள் மற்றும் நகைகள் கொள்ளை போயுள்ளது. அது தொடர்பாகவும் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!