ஸ்ரீபெரும்புதூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

ஸ்ரீபெரும்புதூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடு மற்றும் உடைக்கப்பட்ட பீரோ.

Kanchipuram News in Tamil -ஸ்ரீபெரும்புதூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடித்துச் சென்றனர்.

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆயகொளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுதர்சனம்.இவர் தனது மனைவி ஜானகி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹூண்டாய் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் சுதர்சனம், வழக்கம்போல் இன்று பணிக்கு சென்றுவிட, இவரது மனைவி ஜானகி தங்களது பக்கத்து வீட்டின் ஒரு துக்க நிகழ்வுக்காக வீட்டினை கதவினை பூட்டிவிட்டு அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

பின்னர் நிகழ்வு முடிந்தபின் ஜானகி வீடு திரும்பி கதவினை திறந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 35சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி கதறி அழுதுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் ஜானகி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பட்டபகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி கொள்ளை அடித்து சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இதே போல் கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் வீராசாமி பிள்ளை தெருவில் 35 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இதுவரை கொள்ளையர்களை கண்டுபிடிக்காத சூழலில் தற்போது மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது பொது மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது