காஞ்சிபுரம் அருகே 2 மகள்களை படுகொலை செய்த பாசக்கார தந்தை.

காஞ்சிபுரம் அருகே  2 மகள்களை படுகொலை செய்த பாசக்கார  தந்தை.
X
மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த தந்தையிடம் மகள்கள் கேட்டதால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து இருவரையும் கொலை செய்துவிட்டு போலிசில் சரண்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த சின்ன மதுரைப்பாக்கம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளது.

கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாத நிலையில் இவரது மனைவி ஊத்துக்காடு அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் பணிபுரிந்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் தந்தை (பழைய படம்)

தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் அவரது மகள்கள் நந்தினி (+1) மற்றும் தீபா(5ம் வகுப்பு) ஆகியோர் வீட்டில் இருந்த நிலையில் இன்று 12 மணியளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த தந்தையிடம் மது அருந்துவது குறித்து கேட்டபோது கோபம் அடைந்த அவரது தந்தை அருகில் இருந்த கட்டையால் இருவரின் தலையிலும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் மரணம் அடைந்தனர்.

இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
future of ai act