காஞ்சிபுரத்தில் வரும் 30ம் தேதி இணையவழி விவசாயிகள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வரும் 30ம் தேதி இணையவழி விவசாயிகள் கூட்டம்
X

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகள் கூட்டம் இணையவழி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும். இதில் விவசாய சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளும் மனுக்களாகவும், நேரடியாகவும் தெரிவிக்காலம்.

தற்போது கொரோனா விதிமுறைகளால் தடைசெய்யப்பட்ட இந்த நிகழ்வு, இம்மாதம் முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இம்மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 30.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் "கூகுள் மீட்" காணொளி காட்சி இணையவழி மூலம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டார அலுவலகத்தில் அளிக்கலாம். அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!