ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ. 6 கோடி அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ. 6 கோடி அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை
X

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில், எச்சரிக்கை பலகை வைத்த வருவாய்த் துறையினர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பகுதியில் அரசு மேட்டு புறம்போக்கு நிலத்தை, ஆக்கிரமிப்பில் இருந்து வருவாய்த் துறையினர் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 6 கோடி மதிப்பிலான ஆறு ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அஞ்சா கோவிந்தசாமி ஆகியோர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெமிலி கிராமம் மேவலுர்குப்பம் கிராமம் மற்றும் செல்லபெருமாள் நகரில் வசிக்கும் நாற்பத்தி நான்கு இருளர் குடும்பங்களுக்கு, இலவச பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பாதுகாப்புடன் அகற்றி எச்சரிக்கை பலகை வைத்தனர்.

மேலும் இந்த ஆறு ஏக்கர் நிலத்தை இதுவரை ஆக்கிரமித்து கையகப்படுத்தியவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய் 6 கோடி என வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக இன்னும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட வேண்டிய அரசு நிலங்கள் விரைவில் நீக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா