விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு

விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு
X

விடுதி கழிவுநீர் வெளியேறி, பாதிப்படைவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திருமால் நகரில், தனியார் விடுதி கழிவுநீரால் குடியிருப்பு பகுதி மற்றும் ஏரிகள் மாசடைவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் ஊராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்டோர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு, பெண்கள் தங்கியுள்ளனர்.

மேலும் இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றி வருவதால, அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது எனவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி, விடுதியினை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த கழிவு நீர், அருகிலுள்ள பிள்ளைப்பாக்கம் ஏரி வழியாக சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. எனவே, கழிவு நீர் வெளியேற்றப் பிரச்சனையை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சென்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்