வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,  கண்காணிப்பு அலுவலர் இல்.சுப்பிரமணியன் அவர்களுக்கு  விளக்கி கூறிய  போது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை, மாவட்ட ஆட்சியருடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், இன்று பல்வேறு இடங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குன்றத்தூர் வட்டத்தில் மௌலிவாக்கம் ஐயப்பன்தாங்கல் மற்றும் பரணிபுதூர் பகுதிகளில் பொதுப்பணித் துறையினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகள் போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேற கட்டப்படும் கீழ்மட்ட கால்வாய் பணியினை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து மாங்காடு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகளையும், மலையம்பாக்கம் மற்றும் வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் ஊரக வளர்ச்சி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 21 மண்டலக் குழு அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், மழைகாலங்களில் கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் கூப்பைகள் அகற்றப்படுகின்றதா என உறுதிபடுத்த வேண்டும்.

பிளீச்சிங் ஃபவுடர் தேவையான இருப்பு வைத்திருக்க வேண்டும். ஏரிகள் மற்றும் குளங்களை கண்காணிக்கப்பட வேண்டும். சிறப்பு மருத்துவ முகாம் தேவைப்படும் இடங்களில் உடனடியாக அமைக்கப்படவேண்டும்.

தண்ணீர் தேங்கும் இடங்களில் பம்புசெட் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் வெளியேற்ற தேவையான பம்புசெட் மோட்டார்கள் இருப்பு வைத்து இருக்கவேண்டும்.

மக்களை தங்கவைக்க நிவாரண முகாம்களை தேர்வுசெய்யும்போது நீர்புகாத இடமாக தேர்வு செய்யப்படவேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

மக்கள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட அவசர உதவி மையத்தை தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-27237107, 044-27237207 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் வாட்ஸ்அப் மொபைல் என்: 93454 40662 என்ற எண்னை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்ஆய்வு கூட்டத்தில் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு முதன்மை செயலர்/தமிழ்நாடு மின் நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சி.விஜயராஜ் குமார், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குநர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!