நீர்நிலையில் கட்டியிருந்த ஆஞ்சநேயர் கோவில் வருவாய் துறையால் இடிப்பு

நீர்நிலையில் கட்டியிருந்த ஆஞ்சநேயர் கோவில் வருவாய் துறையால் இடிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த ஆஞ்நேயர் கோயில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோயிலை இடித்து வருவாய்த்துறை நிலத்தினை மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் , வரதராஜபுரம் அடையாறு கால்வாய் நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து நரசிம்மர் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு இருந்தது.

இக்கோயில் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருப்பது வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருந்த கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்ததையொட்டி இன்று அதிகாரிகள் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முற்பட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த மாதம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இன்றும் வருவாய் துறை அலுவலர்கள் சென்றபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தாம்பரம் உதவி கமிஷனர் மற்றும் மணிமங்கலம் போலீசார் வாக்குவாதம் செய்து எதிர்ப்பு தெரிவித்த 10 கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருந்த கோயில் மற்றும் கட்டிடங்களில் இடித்து அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த இடத்தின் மதிப்பு சுமார் 3 கோடி (58சென்ட் நிலம்) என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story