ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ்
X
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று அனைத்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பதவியேற்றனர்.

நாளை தலைவர் மற்றும் துணைத்தலைவர் மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தலைவர் துணைத் தலைவர் பதவிகளை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் துணை மேயர் வேட்பாளராக குமரகுருநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக திருமதி செல்வமேரி அருள்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்