வெள்ள பாதிப்பு பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கடந்த ஓரு மாதமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்ட வரதராஜபுரம் , முடிச்சூர் பகுதிகளில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வரதராஜபுரம் பி டி சி காலணி பகுதியில் நீர் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கம் அளித்தனர்.அடையாறு கால்வாயில் இருந்து வெளியேறும் நீரை எடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு மனு அளித்தனர்.
அதன்பின் அப்பகுதியில் சூழ்ந்துள்ள நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளியை தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் உதவியை வழங்கினார்.
அமுதம் காலணி பகுதியில் நீரால் சூழ்ந்துள்ள பொதுமக்களுக்கு 300க்கும் மேற்பட்டோர்க்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
ஆய்வின்போது ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோதரன் , சிறப்பு அதிகாரிகளான அமுதா மற்றும் காஞ்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியம் , மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu