4 கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலம் மீட்பு ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை

4 கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலம் மீட்பு  ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை
X

  பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஜேசிபி உதவியுடன் மீட்ட போது எடுக்கபட்டது.

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் நாலு கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலத்நினை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலத்தினை தனிநபர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் பள்ளிக்கு புதியகட்டிடம் , விளையாட்டு திடல்கள் ஆகியவைகளின் பயன்பாடு குறைந்து வந்தது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஆர்த்தியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு உறுதி செய்யபட்டது.

இதனை தொடர்ந்து இன்று குன்றத்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர்,

இது குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி கூறுகையில் , தற்போது மீட்கப்பட்ட 1.35 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி மதிப்பாகும். இந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil