ஓரகடம் அருகே கோயில் ஆபரணங்களை திருடியவர் கைது
ஓரகடம் அருகே கோயில் ஆபரணங்களை திருடியவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் அடுத்த தத்தனூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு எல்லை அம்மன் ஆலயம். நேற்று மாலை வழக்கம் போல் கோவில் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஒரகடம் காவல் நிலையத்தை சேர்ந்த இரவு ரோந்து காவலர் சுரேஷ் மற்றும் குணசேகரன் இரவுக் காவல் பணியின் போது கண்ணன்தாங்கல் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை அதிகாலை 2 மணிக்கு நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்துள்ளார்.
மேலும் அவரது இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டபோது நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும், தத்தனூர் கிராமத்தில் உள்ள எல்லையம்மன் ஆலயத்தில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, வெள்ளி முககவசம், கண்மலர், விபூதிப்பட்டை உள்ளிட்ட அம்மன் ஆபரணங்களை திருடி வந்து கொண்டிருப்பதாக ஒப்புக்கொண்டார்.
அவரிடமிருந்து அம்மன் ஆபரணங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரகடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
காலையில் வழக்கம்போல் பூசாரி கோவிலுக்கு செல்லும்போது இந்நிகழ்வு குறித்து காவல்துறைக்கு தெரிவித்தபோது, கோயிலில் திருடிய திருடன் அகப்பட்டதும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அம்மன் நகைகள் மீட்கப்பட்டதை அறிந்து அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu