எண்பது கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

எண்பது கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது
X

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை ஸ்ரீபெரும்புதூர் மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் 80 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாலாஜிக்கு சொந்தமான மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான காவல்துறையினர் குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து கடையின் உரிமையாளர் பாலாஜி மற்றும் கடையில் வேலை செய்யும் ஸ்ரீதர்(53) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது போலீசார் செய்தனர்.

Tags

Next Story