செல்போன் வழிப்பறி திருடர்கள் இருவர் கைது

செல்போன் வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்போன் வழிப்பறி திருடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பிள்ளைச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன் (18). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று வீட்டிற்கு அருகில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 20000 மதிப்புள்ள உயர் ரக செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து மோகனகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரித்ததில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் மோகனகிருஷ்ணனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த சங்கர்ராமன்(23), சாம்குமார் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்போன் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!