தொட்டி இங்கே... தண்ணீர் எங்கே..? இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிகள்

தொட்டி இங்கே... தண்ணீர் எங்கே..?  இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிகள்
X

திருப்புலிவணம் அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைவருக்கும் குடிநீர் எனும் வகையில் ஊராட்சிகளில் கனிமவள நிதி மற்றும் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ், கிராம வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டப் பணிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில் மத்திய அரசு திட்டங்களில் ஒன்றான, அனைவருக்கும் தரமான குடிநீர் வீடுகள் தோறும் வழங்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக கிராமங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு‌ வருகிறது.

பல இடங்களில் கட்டபட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எனினும், கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீர்இணைப்பு பணி நடைபெற்றால் உள்ளது. இதனால், தற்போது கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. குடிநீர் வழங்குவது தடை ஏற்படாமல் இருக்க நேரடியாக நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லமால் நேரடியாக வீடுகளுக்கு செல்கிறது. பல லட்சம் மதிப்பில் கட்டபட்டு காட்சி பொருளாகவே உள்ளது. ஆகையால் இதற்கு தேவையான நிதி மற்றும் உபகரணங்கள் பொருத்தி விரைவில் கிராமங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா