தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகள்!

தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகள்!
X

தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அலுவலருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆட்சியர் கலைச்செல்வி உடன் எஸ் பி சண்முகம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் தேர்தல்  பணி அலுவலர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்ட மன்றத்தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மொத்தம் 84 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்ட மன்றத்தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மொத்தம் 84 குழுக்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 –ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்ட மன்றத்தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள Flying Squad Team (36 Teams), Static Surveillance Team (36 Teams), Video Surveillance Team (8 Teams), Accounting Team, Assistant Expenditure Observer Team, Expenditure Monitoring Team, and Control Room Team ஆகிய மொத்தம் 84 குழுக்களுக்கான பணிகள் குறித்த பயிற்சியும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மேற்படி குழுக்களின் பணி மற்றும் பொறுப்புகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் தேர்தல் விதிமுறைகள் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்து நற்பயெரை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பார்த்தசாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்