புத்தக கண்காட்சி அமைக்கும் பணிகள் துவங்கியது!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புத்தகக் கண்காட்சி வரும் ஒன்பதாம் தேதி துவங்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் புத்தகக் கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணி துவங்கியது.
காஞ்சிபுரத்தில் வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி புத்தகக் கண்காட்சி துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழாவானது "காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா-2024" என்ற தலைப்பில் 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்புத்தகத் திருவிழா 2024 காஞ்சிபுரத்தில் இரண்டாவது மாபெரும் புத்தகத் திருவிழாவாகும்.
இப்புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினரால் 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
இம்முறை குழந்தைகளுக்கான அரங்குகள் மற்றும் மாணவர்களுக்கான Carrier Guidance சம்மந்தமாக உள்ள புத்தக அரங்குகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் வாசிக்கும் திறனை மேம்படுத்த, பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள், பள்ளி மாணவ,மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் தினம் தோறும் அரங்கிற்குள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிந்தனை தூண்டும் பேச்சாளர்கள், திறனை மேம்படுத்த வழிகாட்டும் பேச்சாளர்கள், சிந்திக்க வைக்கும் பட்டிமன்றங்கள், மனதை மகிழ்விக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், புத்தக நன்கொடை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு, தினம்தோறும் 5 நபர்களுக்கு புத்தக பரிசு குலுக்கள் முறையில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரங்குகள் அமைக்கும் பணி ஆனது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் துவங்கி உள்ளது.
கிரேன் கொண்டு இதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், ஊழியர்கள் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி பணியில் ஈடுபட்டு வருவது சிறிது அதிர்ச்சி அளிக்கிறது.
பல அடி உயரத்தில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாமல் அதில் அமர்ந்து பணியாற்றும் நிலையை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu