வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி
பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகளை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதல் பெற்று செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதியில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 916 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் செய்தியாளர்கள் தங்கள் செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரு ஒன்றியங்களில் 3,69.099 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது.
இருவேறு மொத்த வாக்காளர் புள்ளி விவரங்களால் செய்தியாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக இந்தப் புள்ளிவிவரங்களை மக்களுக்கு அளித்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக 3183 வாக்காளர்கள் சேர்ந்துள்ளது எப்படி என தெரியவில்லை.
முதல்கட்ட வாக்கு பதிவின்போது காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து எழுபது நபர்கள் விடுபட்டு உள்ளதாக கூறி மாவட்ட ஊராட்சி திட்ட முகமை திட்ட இயக்குனரை அப்பகுதியினர் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நிர்வாகம் வெளியிடும் செய்திக்குறிப்பில் புள்ளிவிவரங்கள் முரண்பட்டதாக இருப்பது தொடர் குழப்பத்தை ஏற்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu