திருக்கோயில் நிலங்கள் மறு அளவீடு‌ பணி: ஓரு லட்சம் ஏக்கர் அளவை நிறைவு

திருக்கோயில் நிலங்கள் மறு அளவீடு‌ பணி: ஓரு லட்சம் ஏக்கர் அளவை நிறைவு

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மறு அளவீடு செய்து வரும் பணியில் நில அளவையர் குழு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வட்டாட்சியர் வசந்தி தலைமையிலான நில அளவையர் குழு இதுவரை 3500 ஏக்கருக்கு மேல் அளவீடு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு நிலங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக அளவீடு செய்யாமல் கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நிலங்களின் மூலம் வருவாய் பெறப்பட்டு கோயில்கள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் குறைந்த குத்தகையை கொடுத்து மோசடி நடப்பதை அறிந்த இந்து சமய நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் மறு அளவீடு செய்யப்படும் என அறிவித்தார்.

அவ்வகையில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் சொந்தமான நிலம் அளவீடு பணி கடந்த 2021 ல் துவங்கப்பட்டு எல்லைக்கல் நடும் பணியை துவக்கினார்.

தமிழகம் முழுவதும் அறுபத்தி ஆறு நில அளவைகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் வசந்தி மற்றும் திருக்கோயில் இணை ஆணையர் வான்மதி தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நில அளவீடு பணியும் நடைபெற்று வருகிறது.

இக்குழுவில் ஓய்வு பெற்ற நில அளவையர், வட்டாட்சியர், நில அளவையர் மற்றும் துணை அளவையர்கள் கொண்ட குழு சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக நில அமைவிட குறியீட்டு மென்பொருளைப் பயன்படுத்தி திருக்கோயில் நிலங்களில் புகைப்படங்களை வரைவு செய்து பதிவேடு செய்கின்றனர்.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 51 லட்சம் மதிப்பிலான அதிநவீன நில அளவை கருவியான 2 ரோவர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் குறைந்த நாட்களில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 3500 ஏக்கர் நிலங்கள் மறு அளவீடு செய்யப்பட்டு, எல்லை கற்கள் நடும் பணி முடிவுற்றுள்ளது.

இதுகுறித்து ஊழியர் தெரிவிக்கையில், முதன்முறையாக இந்து சமய அறநிலையத்துறை நில மறு அளவீடு அதி நவீன கருவிகள் கொண்டு துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. பழைய அளவீடு முறையின் கொண்டு ஒரு ஏக்கர் அளவீடு செய்தால் 12 மணி நேரத்திற்கு மேலாகும், அதிநவீன கருவி தற்போது பயன்படுத்தப்படுவதால் ஒரு மணி நேரத்தில் அளவீடு செய்யும். இது மிகத் துல்லியமாக எந்த தவறும் இன்றி இருக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர் மற்றும் வட்டாட்சியர் வசந்தி தலைமையிலான நில அளவை குழு குறுகிய காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1653 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தையும் , செங்கல்பட்டு மாவட்டத்தில்1865 ஏக்கர் நிலமும் மறு அளவீடு செய்து எல்லைக் கல் நடும் பணி செய்து நிறைபெற்றுள்ளது.

இம்மாத இறுதிக்குள் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்த இலக்கான ஒரு லட்சம் ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் மறுஅளவீடு செய்யும் பணி நிறைவு பெறும் என தெரிய வந்துள்ளது.

Tags

Next Story