வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்.

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்
மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண்மை சட்டங்கள் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டம், பொது சொத்துக்களை தனியாருக்கு அளித்தல், பெட்ரோல் , டீசல் , விலை உயர்வை உள்ளிட்டவைகளை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் மற்றும் கடையடைப்பு சாலை மறியலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் நேரடி அருகில் எஸ்டிபிஐ கட்சி செயலாளர் ஜாபர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மற்றும் மின்சார சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண வைபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu