75 வது குடியரசு தின விழா காஞ்சியில் கோலாகலம்..!

75 வது குடியரசு தின விழா காஞ்சியில் கோலாகலம்..!
X

75வது குடியரசு தின விழாவில் நல திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , எஸ் பி சண்முகம் , மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ,  ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஜெயக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 26 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களும், சிறப்பாக பணிபுரிந்த 35 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.


75-வது குடியரசு தின விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நிதியுதவி 3 நபர்களுக்கும், சமூக நலத்துறை சார்பில் பணி நியமன ஆணை 1 நபருக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சலவைபெட்டி 5 நபர்களுக்கும் மற்றும் தையல் இயந்திரங்கள் 13 நபர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரம் 1 நபருக்கும், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும் என 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 600 அரசு அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 54 நபர்களுக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரால் வழங்கி சிறப்பிக்கபட்டனர்.

மேலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ/ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது காவல்துறை துணை தலைவர் பொன்னி இ.கா.ப., காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!