பள்ளி விடுப்பில்லாமல் வந்த 93 மாணவ, மாணவிகளுக்கு பரிசு

பள்ளி விடுப்பில்லாமல் வந்த 93 மாணவ, மாணவிகளுக்கு பரிசு
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வது வட்டத்தில் இயங்கி வரும் நகராட்சி துவக்க பள்ளியில் விடுப்பில்லாமல் கடந்த மாதம் வந்த 93 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ எழிலரசன் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 292 மாணவர்கள் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி கேட்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதன் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 51 வார்டுகளில் நகராட்சி துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் என பல நிலைகளில் செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் நகரில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் தனியார் பள்ளியில் கட்டணத்தை செலுத்த இயலாத ஏழை எளிய மக்கள் மீண்டும் அரசு பள்ளிக்கு அதிக அளவில் சேர்க்கைக்கு வந்தனர்.

மேலும் தமிழக அரசின் புதிய கல்வி திட்டத்தால் மேலும் ஈர்க்கப்பட்டு தனியார் பள்ளியில் இருந்து பலர் அரசு பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை இடமாற்றம் செய்தனர்.

இந்த நிலையில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு மாற்றங்களை செய்து கற்றல் கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி மாணவர்களை உயர்கல்வி பயில எளிமையான வகையில் தயார்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு பகுதியான திருக்காலிமேடு பகுதியில் கடந்த 1961 இல் துவக்கப்பட்டு தற்போது வரை ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கான துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் துவக்ப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி தற்போது இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை 292 மாணவ மாணவிகள் சுற்றியுள்ள பகுதியிலிருந்து இப்பள்ளியில் சேர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.

தற்போது பெற்றோர்கள் வேலைவாய்ப்பு காரணமாக மாணவர்கள் பலர்கல்வி இடைநிற்றல் வருவதை பள்ளிக் கல்வித் துறை அறிந்து மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வகையில் இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர் மோகன், பள்ளிக்கு நாள் தோறும் மாணவர்கள் வர வேண்டும் எனவும் அதை ஊக்குவிக்க மாதந்தோறும் விடுப்பில்லாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் 28 மாணவர்களும் , ஆகஸ்ட் மாதத்தில் 47 மாணவர்கள் , செப்டம்பரில் 67 மாணவர்களாக உயர்ந்தும் , அக்டோபரில் 93 ஆக விடுப்பில்லாமல் வரும் மாணவர்களுக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதனை மேலும் ஊக்கிவிக்கும் வகையில், அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயருமான குமரகுருநாதன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோரின் பள்ளிக்கு அழைத்து மாணவர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கடந்த மாதம் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த 93 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணைமேயர் , பள்ளிக்கு விடுப்பில்லாமல் வந்தாலே கல்வி கற்க ஆர்வம் அதிகரிக்கும் எனவும் இதுபோன்று மாணவர்களை பிற பள்ளிகளும் ஊக்குவித்து வருங்கால இளைஞர்களுக்கு நல்ல தரமான கல்வியை கற்பிக்க வேண்டும் என ஆசைகளை கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!