தேர்தல் பணியாற்றும் காவல்துறையினருக்கான தபால் வாக்கு பதிவு துவக்கம்!

தேர்தல் பணியாற்றும் காவல்துறையினருக்கான  தபால் வாக்கு பதிவு துவக்கம்!
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்கு பதிவு செலுத்த வந்த ஊர்க்காவல் படையினர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் காவல்துறையினர் ஊர்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாக்கு செலுத்தும் வகையில் தபால் வாக்கு பதிவு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான காவல்துறை, ஊர்க்காவல் படை மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி துவங்கியது.

தமிழக முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மாவட்ட தேர்தல் நிர்வாகம் தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி உள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் அலுவலர்கள் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பதிக்கும் பணியினை நேற்று ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்கும் மூலம் வாக்கு பதிவு செலுத்தும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருப்போரூர் பகுதிக்கு ஒரு வாக்குப்பதிவு பெட்டியும் , மதுராந்தகம் செய்யூர் உத்திரமேரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நபர்களுக்கு மற்றொரு உருவாக்கு பெட்டி என இரு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு அலுவலர்கள் உரிய ஆவணங்கள் காட்டி காவல்துறையினர் ஓய்வு பெற்ற காவல் துறையினர் ஊர்காவல் படையினர் என பல தங்கள் வாக்குப் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

வாக்குப்பதிவுகளை கண்காணிக்க அரசியல் கட்சி பிரமுகர்களும், துப்பாக்கி ஏந்திய காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை என இன்றும் , நாளையும் என இரு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 147 ஊர் காவல் படையினர் உள்ளிட்ட 814 நபர்கள் தபால் வாக்கு பதிவு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!