காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு
X

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் ஆத்மா தொண்டு நிறுவனம் இணைந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே பொதுமக்களுக்கான பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் பேசுகையில், விழிப்புணர்வு என்பது தன் செயல் மூலம் பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.

ஆத்மா தொண்டு நிறுவனம் சார்பில் கிளி‌ஜோசிய குறு நாடகம் மூலம் மக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் அதை தவிர்த்தல் குறித்தும் ஜோசியம் மூலம் கலைஞர்களால் ஏற்படுத்தபட்டது.

இதில் எவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு பதாகைகள் , பாடல் , ஆடல் மூலம் எளிய முறையில் புரியும் வண்ணம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மாமன்ற உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேயர் அறிவுரை :

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது மேயர் , மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் பாட்டில்களை வழங்கி வந்தனர். இதை கண்ட மேயர் மகாலட்சுமி யுவராஜ் உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாமே இதை செய்யலாமா என அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings