காஞ்சிபுரத்தில் அசைவம் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

காஞ்சிபுரத்தில் அசைவம் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
X

அசைவம் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

நியாய விலை கடைகளில் நிற்பது போல நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மட்டன் சிக்கன் இறைச்சி வகைகளை வாங்கிச் சென்றனர்.

இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் பண்டிகையான தீபாவளி பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

அதே வேளையில் நாவிற்க்கு ருசியாக அசைவ உணவுகளை தயாரித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு அசைவ விருந்து உண்டு மகிழ்வதும் வாடிக்கை.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை அசைவ விருந்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள மட்டன் சிக்கன் விற்பனை செய்யும் இறைச்சி கடைகளில் காலை நேரத்திலேயே ஏராளமான அசைவ பிரியர்கள் தங்களுக்கு தேவையான மட்டன் சிக்கன் இறைச்சி வகைகளை தங்களுக்கு தேவையான அளவிற்கு வாங்கி சென்றனர்.

நியாய விலைக் கடைகளில் தான் வரிசையில் நின்று பொருட்களை வாங்குவோம் என்ற நிலையில், தற்பொழுது காலம் மாறி, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஓரிக்கை,கீழ் கேட்,காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெரு, ஓரிக்கை மற்றும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை கடையில் ஏராளமான அசைவ பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மட்டன் சிக்கன் இறைச்சி வகைகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.

அசைவப் பிரியர்கள் இறைச்சி கடை வாசலில் இறைச்சி வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழியே சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Tags

Next Story