ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி காஞ்சியில் அமைதி பேரணி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி காஞ்சியில் அமைதி பேரணி

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட அமைதிப் பேரணி நடைபெற்ற போது

காஞ்சிபுரம் பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அனைத்து கட்சி பிரமுகர்களும் அமைதி பேரணியில் பங்கேற்றனர்

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும் , வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட அமைதி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே சென்னை காவல் துறை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் காவல்துறையிடம் எட்டு பேர் கொண்ட கும்பல் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தது.

இந்தியன் 2 ரிலீஸ்! படம் பாக்க முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க..!

இந்நிலையில் தமிழக மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி , சட்டம் ஒழுங்கினை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

காஞ்சிபுரம் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் மலையுர் புருஷோத்தமன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் பி சி தனசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகர், திமுக வழக்கறிஞர் அணி சேர்ந்த வித்தகவேந்தன் என 250 மேற்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட அமைதி பேரணி காஞ்சிபுரம் மாநகராட்சி பழைய அலுவலகம் முன்பு ஆரம்பித்து , காந்தி சாலை ,வள்ளல் பச்சையப்பன் தெரு , காமராஜர் தெரு, பேருந்து நிலையம் வழியாக காந்தி சாலையில் உள்ள பெரியார் துணை அடைந்தது.


அங்கு அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தியும், மலர் தூவி அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி மாவட்ட தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

அனைவரின் கோரிக்கையாக உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தல், திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், மணிமண்டபம் அமைக்க நிலம் அரசு ஒதுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதிர்ச்சியில் கயல் குடும்பம்..! குண்டைத் தூக்கி போட்ட ஆனந்தி!

இந்த நினைவு பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெறும் பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் , புரட்சி பாரதம் காஞ்சிபுரம் நகர செயலாளர் குட்டி என்கிற சத்தியசீலன், ஒன்றிய செயலாளர் பவளஅரசன், அதிமுக ஒன்றிய செயலாளர் கும்பகோணம் ஜீவானந்தம் , மக்கள் தேசம் கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருணாநிதி, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story