அதிர்ச்சியில் கயல் குடும்பம்..! குண்டைத் தூக்கி போட்ட ஆனந்தி!

அதிர்ச்சியில் கயல் குடும்பம்..! குண்டைத் தூக்கி போட்ட ஆனந்தி!
X
கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள். வாட்ஸ்அப்பில் இணைய

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

கயல் வீட்டில் மூர்த்தியுடன் அவன் அம்மா, தம்பி அன்பு ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகையில் பெயர் போடுவது குறித்து அவர்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள். அண்ணி காபி போட்டு கொண்டு வந்து கொடுக்கிறாள். அந்த நேரத்தில் ஆனந்தியைத் தேடி அவளது தோழிகள் வந்திருக்கிறார்கள்.

ஆனந்தியும் அவளது தோழிகளும் அறையில் சென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அக்கா குறித்தும் அவள் திருமணம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனந்தி க்குதானே அடுத்து கல்யாணம் என்று பேச அவள் வெட்கப்படுகிறார். அக்கா கயலை கல்யாணம் பண்ணிக்கப் போற எழில் மாமா குறித்து ஆனந்தி பேச, நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே புகழ்ந்து வருகிறார்.

இதனை அறிந்த தோழிகள், எழில் மாமாவை பார்க்க வேண்டும் என்று கேட்க, விளையாட்டாக ஆனந்தி பொய் ஒன்றை சொல்கிறாள். முதல்முறை பேசும்போது அவளது ஃபோனை கட் செய்து விடுகிறான் எழில். இதனால்தான் ஆனந்தி தன் அக்காவுக்கு ஆக்சிடென்ட் என்று போனை போட, பதறியடித்துக்கொண்டு வருகிறான் எழில்.

அக்கா வண்டில இருந்து கீழ விழுந்து பயங்கரமா ரத்தம் வந்துகொண்டிருக்கிறது. நீங்க வந்து பாருங்க மாமா. நீங்க வந்து சொன்னாதான் அக்கா ஹாஸ்பிட்டலுக்கு வருவாங்க என்று சொல்ல, அடித்துபிடித்துக்கொண்டு வருகிறான் எழில்.

அதற்கு சற்று முன்பாக கயல் வீட்டுக்குள் வருகிறாள். அவள் மிகவும் சோர்ந்து கவலை தோய்ந்த முகத்துடன் வந்து சேர்கிறாள். மூர்த்தி கல்யாண பத்திரிகை அட்டையைக் கொடுத்து எந்த டிசைன் பிடித்திருக்கிறது என்று சொல்லி கேட்க, அவை அனைத்தையும் கீழே போட்டுவிட்டு, சிக்கனமா ஒரு மஞ்ச பத்திரிகை போடுங்க என்று சொல்கிறாள்.

நம்ம சக்திக்கு தகுந்த மாதிரிதான் நாம செலவு பண்ணனும். இப்பதான் மூர்த்தி கொஞ்சம் நிமிர்ந்து வரான் அதுக்குள்ள கடன் வாங்கி அவன் தலையில சுமைய செலுத்துறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்ல. ஆனந்தியோட படிப்பு செலவு, குழந்தையோட சேமிப்புனு எக்கச்சக்க செலவு இருக்கு. கிராண்டா பத்திரிகை அடிக்கிறதால எதுவும் நடக்கப்போறதில்ல என்று சொல்லிவிட்டு கயல் செல்கிறாள். ஆனால் அம்மாவோ உனக்கு பிடிச்சத பண்ணு என மூர்த்தியிடம் சொல்கிறாள்.

அந்த நேரத்தில் கயலைத் தேடி எழில் வருகிறாள். மூர்த்தியும் அம்மாவும் பதற்றமடைய, எழில் கயலை கத்தி கூப்பிடுகிறான். இதனால் குடும்பமே பதற்றத்தில் எழுந்து நிற்கிறது. ஆனந்தி சொன்ன பொய்யை உண்மை என நம்பிய எழில், பதறிவிட்டான். ஆனந்தி தனக்கு கால் செய்து சொன்னதை கயலிடம் எழில் சொல்ல, கயல் கடுப்பாகிறாள்.

அதுவரை அமைதியாக இருந்த எழில், தான் பொய் சொன்னதாக ஆனந்தி சொன்னதும் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை கோபம் கொந்தளித்து அடிக்கச் செல்கிறான். ஆனந்தியை எச்சரிக்கை செய்துவிட்டு, அவளுக்கு புத்திமதி சொல்கிறான். அப்போது கயலின் அம்மா நீங்க குடுத்த இடம் தான் காரணம் என சொல்கிறாள்.

தான் எந்த அளவுக்கு பயந்துவிட்டதை சொல்கிறான் எழில். புலம்பிக்கொண்டே வண்டியை வேகமாக ஓட்டி வந்ததாக சொல்கிறான். ஆனந்தி மன்னிப்பு கேட்கிறாள். நான் ஓவர் ஆக்டிங் செய்வதாக நினைக்காதீர்கள். நான் வாழ்வதே கயலுக்காகத்தான்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

என் குழந்தை, என் உலகம், என் வெற்றி எல்லாமே என் கயலுக்காக தான். கயலுக்கு சின்னதா காய்ச்சல்னா கூட எனக்கு ரொம்ப டிஸ்டர்பா இருக்கும். சின்ன வயசுல இருந்தே நான் இப்படித்தான். இதோ பாரு ஆனந்தி நீ இனிமேல் கயல பத்தி வேற எதையும் என்கிட்ட சொல்லாத. அவ முகத்துல சந்தோஷத்த தவிர வேற எதையும் நான் பாக்க கூடாது. இத என் கயலும் புரிஞ்சிக்கணும்.

மூர்த்தியும் மாப்ள, என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்டீங்கன்னா அவ காலத்துக்கும் சந்தோஷமாக இருப்பார் என சொல்லிவிட்டு எழில் கிளம்புகிறான். அத்தை மாப்ள காப்பி குடிச்சிட்டு போங்கன்னு சொல்ல, எழில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்கிறான். கயலும் அனைவரிடமும் வேலையை பார்க்க சொல்லிவிட்டு, ஆனந்தியை அவள் தோழிகளை பார்க்கச் சொல்கிறாள். கயலும் வருத்தத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனந்தியின் தோழிகள், அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொல்கின்றனர். அப்போது அங்கே கயல் வருகிறாள், கயலிடம் ஆனந்தி, எழில் குறித்து பேசுகிறாள். எழில் மாமா உனக்கு தாய் மாதிரிதான் அக்கா. உனக்கு ஒன்னுன்னு சொன்னதும் அவரு தாய் மாதிரி துடிதுடிச்சிட்டாரு.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் இப்படி ஒரு மாப்பிள்ளை வேணும்னு நாங்க எல்லாரும் நினைக்கிறோம். அக்கா இதுமாதிரி ஆளுங்கள்லாம் புத்தகங்கள்லயும் கதைகள்லயும் இருப்பாங்கன்னுதான் பார்த்திருக்குறோம். அக்கா யாருக்காகவும் எழில் மாமாவ மிஸ் பண்ணிடாதீங்க அக்கா.

உன்ன போயி எப்படி எழில் என்னால மறக்கமுடியும். காதல்னா சுத்துறதும் ஜாலியா டைம் பாஸ் பண்றதும் இல்லனு இப்பதான் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா நா என்ன பண்ணாலும் உங்க அம்மா என்ன அவங்க மருமகளா ஏத்துக்கமாட்டாங்கன்னுதான் பயமா இருக்கு. கடவுள் குடுத்த வரத்த நான் தவற விடுறேனா எழில். எனக்கு ஒன்னுமே புரியலடா.

நீ உயிரோட இருக்கணும். 100 வருசத்துக்கு மேல நீ உயிரோட இருக்கணும். என்னோட சுயநலத்துக்காக என் காதல நான் பயன்படுத்திக்க மாட்டேன். எழில் உன்ன எப்படி என் காலத்துக்கும் நான் கஷ்டப்படுத்த முடியும். நீ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால ஏத்துக்கவே முடியாது. நீ எனக்கு வேணும் எழில். என்னால சாதாரண கயலா இருக்க முடியல. என் கம்பீரம் உடஞ்சி போற மாதிரி இருக்கு. என்ன பண்ண போறேன் ஒன்னும் புரிய ல என கயல் யோசிக்கிறாள்.

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial Yesterday episode

அவனுக்கு மனுசங்கள நேசிக்க மட்டும்தான் தெரியும். ஒரு பிரச்னைனா விலகி போற மனுசங்களுக்கு மத்தியில, ஒருத்தருக்கு ஒரு பிரச்னைனா அத நான் சரிபண்ணி வைக்குறேன்னு சொல்லி முன்னாடி வந்து நிப்பான். கலங்கி நிக்குற யாரையும் அவன் முன்னாடி நின்னு ஜெயிக்க வைப்பான்.

எழிலோட ஒத்த வார்த்தை என் மொத்த குடும்பத்தையும் தாங்கிப்பிடிக்க காரணமா இருந்துது. நா இப்படி தைரியமான பொண்ணா இருக்க காரணமே எழில்தான். எனக்கு அப்பா கிடையாது. என் அப்பாவோட உருவத்த எழில்கிட்ட நான் பாத்திருக்கேன். அப்பா எனக்கு திரும்ப கிடச்சிட்டதா நா நினச்சிருக்கேன்.

இப்படி பேசிக்கொண்டிருக்கையில், தீபிகா எழில் குறித்து உருகுகிறாள். இப்படி ஒரு ஜெண்டில்மேன நான் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும் என்கிறாள் தீபிகா.

எழிலுக்கு பிடிச்சவங்க பொய் சொன்னா அது அவனுக்கு பிடிக்காது. அவன் பயங்கரமா கோபப்படுவான்.

அப்படின்னா நான் எழில்கிட்ட எதையுமே மறைக்க மாட்டேன். எழில் வாழ்க்க நல்லா இருக்கணும்னா அவரோட மனைவிங்கற ஸ்தானத்துல நான் இருக்கணும். நீங்க எப்படி அவர பாக்க நினைக்குறீங்களோ அதவிட பெரிய அளவுல பாத்துப்பேன். இந்த உலகத்துல யாரும் அப்படி ஒரு காதல் செஞ்சிருக்கமாட்டாங்கங்குற அளவுக்கு அவர திகட்ட திகட்ட காதலிப்பேன் என தீபிகா பேசிக்கொண்டிருக்கிறாள்.

கயல் இதனை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறாள். அவளின் வெந்த புண்ணில் வேல் பாய்க்கும் வகையில் அவளையே பாராட்டச் சொல்கிறாள் தீபிகா.

இந்த நேரத்தில் எழிலும் அவனது அப்பாவும் ஜீப்பில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் ஜாலியாக கலாய்த்துக்கொண்டே வருகிறார்கள். எழிலின் அப்பா தான் இன்னமும் இளமையாக இருப்பதாக பேசுகிறார்.

இந்த பக்கம் ஹோட்டலில் தீபிகா எனக்கு மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்று தெரிவிக்கிறார். கயல் அவரிடம் எழிலுக்கு மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்று தெரிவிக்கிறாள். அதன்பிறகு எழிலுக்கு பாக்ஸிங் மிகவும் பிடிக்கும் என்கிறார்.

எழிலின் ஜீப், கயலும் தீபிகாவும் இருக்கும் அதே ஹோட்டலுக்கு அருகே வருகிறது. அப்போது எழில் அதனை பார்த்துவிடுகிறான். உடனே கோபப்பட்டு, அங்கு கீழே இறங்கி, ஹோட்டலுக்குள் செல்கிறான். எழிலை கயல் பார்த்துவிடுகிறாள் ஆனால் எழில் கயலைப் பார்க்கவில்லை.

தீபிகாவுடன் நம்மை பார்த்தால் என்ன ஏன் அவாய்டு பண்ற என எழில் ஃபீல் பண்ணுவானே என கயல் நினைக்கிறாள். உடனடியாக தீபிகாவிடம் பொய் சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் செல்ல இருக்கிறாள். அந்த நேரத்தில் எழில் கயலைப் பார்த்துவிட்டு கயல் என்று அழைக்கிறான்.

அருகிலே தீபிகா நிற்கும் போது அவரை அறிமுகப்படுத்தாமலே இருக்கிறாள் கயல். இதனை நினைவுபடுத்த தீபிகா முயற்சிக்கிறாள். உடனே எழிலும் அவள் யார் என்று கேட்க, மேரேஜ் ஆர்கனைசேசர் என்று கூறுகிறாள் கயல்.

எழில் கயலைப் பற்றி பெருமையாக பேச, தீபிகாவுக்கு எரிகிறது. கயல் எப்படியோ தீபிகாவை பற்றி பெரியதாக பேச நினைக்க, எழில் ஏதோ கேட்க தீபிகா மாட்டிக்கொண்டு முழிக்கிறாள்.

அங்க ஷங்கர்னு ஒரு மேனேஜர் இருக்காரு அவரு எனக்கு நல்லா பழக்கம். என் ஆஃபீஸ்ல நடக்குற எல்லா ஈவென்ட்ஸ்க்கும் அவரதான் மேனேஜர். இருவரும் மாறி மாறி ஈவெண்ட் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தீபிகா, பொடி வைத்து தன் வாழ்க்கையில் எழில் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாள். அது எழிலுக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள் தீபிகா. கடைசியில் தீபிகாவை தனக்கு பிடித்திருப்பதாக எழில் சொல்லுகிறாள். இதனால் கயலின் மனம் குறுகுறுக்கிறது. கயலிடமே பெண் இருக்கா என்று கேட்டு, அவளுக்கு செக் சைன் போட்டு கொடுக்கிறான் எழில்.

கல்யாணம் மட்டுமின்றி வளைகாப்பு, முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள்தான் ஈவென்ட் மேனேஜர் என்கிறான் எழில்.

அந்த நேரத்தில் எழிலுக்கு தன் அப்பாவை காரில் விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வருகிறது. இதனால் எழில் வேகமாக எழுந்து செல்லுகையில், பேரர் வந்து எழில் மீது சாப்பாட்டை கொட்டிவிடுகிறார். தவறுதலாக நடந்த இந்த விபத்தை எழில்கூட விட்டுவிட்டார். ஆனால் தீபிகா அதனை பெரிதாக்க முயற்சிக்கிறாள். அந்த நேரத்தில் எழிலின் மீது கொட்டியதை துடைக்க கயல், தனது பையில் டிஸ்யூ தேடுகிறாள். அதற்குள் தீபிகா விரைந்து சென்று தனது கைக்குட்டையை எடுத்து எழிலை துடைக்க, கயல் அதிர்ச்சியடைகிறாள்.

துடைக்கும் சாக்கில் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறாள் தீபிகா. வெட்கத்தில் எழில் நெளிய, கயல் ஆதங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ரொம்ப தேங்க்ஸ் கயல், உன்னாலதான் எனக்கு எழில் கூட அறிமுகம் கிடைச்சிது.

எனக்கும் அவருக்கும் நல்ல வேவ்லென்த் செட் ஆகிடிச்சு. என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு. நான் கிளம்புறேன் கயல், என்ன பத்தி பாசிடிவ்வா அவருகிட்ட எடுத்துச் சொல்லுங்க என்று கூறுகிறாள் தீபிகா.

ஹாஸ்பிட்டல்ல ஒரு முக்கியமான வேலைனு சொன்னேன்ல, நான் கிளம்பி போறப்பதான் இடையில இந்த ஈவென்ட் மேனேஜர மீட் பண்ண வந்தேன்.

அந்த நேரத்தில் ஆனந்தி, எழிலுக்கு அழைக்கிறாள். கயலுக்கு அடிபட்டு நல்லா ரத்தம் போயிட்டு இருக்கு. ஹாஸ்பிட்டல் கூப்பிட்டால் வரமாட்டுறாங்க. நீங்க வந்து சொல்லுங்க அப்பதான் கேப்பாங்க என்று ஃபோனை வைத்துவிடுகிறாள். எழில் ஷாக்கில் இருக்கிறான்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!