அரசு பேருந்தை பட்டாக்கத்தியால் சேதப்படுத்திய மர்ம நபர்கள்: போலீசார் வலைவீச்சு

அரசு பேருந்தை பட்டாக்கத்தியால் சேதப்படுத்திய மர்ம நபர்கள்: போலீசார் வலைவீச்சு
X

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் மர்ம நபர்களால் சேதபடுத்தபட்ட அரசு பேருந்து.

காஞ்சிபுரம் நகரில் காலை இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம நபர்கள், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் காலை இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம நபர்கள், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா அரசு பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் காஞ்சிபுரம் சுற்றுலா கிராம பகுதிகளுக்கு நகரப் பேருந்துகளும், சென்னை பாண்டிச்சேரி திருப்பதி வேலூர் பெங்களூரு என பல மாவட்ட மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

அதிகாலை 4 மணியிலிருந்து பேருந்து சேவைகள் துவங்கியது குறிப்பாக ஐந்து மணி முதல் கிராமப்புறங்களுக்கான பேருந்து சேவை தொடங்கி செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கீழ் காஞ்சிபுரம் பணிமனைக்கு சொந்தமான T 87 என் கொண்ட பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு இயக்கபட்டது.

பேருந்து நிலையத்திலிருந்து சென்ற ஐந்து நிமிடத்திற்குள் வழியில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பிய போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் பட்டாக்கத்தியை பேருந்து கண்ணாடி மீது வீசி ஓட்டுநரை அச்சுறுத்தியதால் பேருந்து நிறுத்தப்பட்டது.

பட்டாகத்தியால் பேருந்து கண் முன் பக்க கண்ணாடி மீது பட்டதால் பேருந்து ஓட்டுநர் , நடத்துநர் அச்சத்திலேயே அதிர்ந்து போனார்.

இதனால் அரசு பேருந்து கண்ணாடி வளையம் போல் ஓட்டை விழுந்ததைக் கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சாலை ஓர வியாபாரிகள் என பலரும் அச்சத்துடன் அதிர்ந்தனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தொமுச நிர்வாகிகள் உடனடியாக அப்பகுதிக்கு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விவரம் கேட்டு அதன் மூலம் சில காஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் வந்து ஓட்டுனிடம் நடந்த விவரங்களை கூறி பேருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.

சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த நபர்களிடம் விசாரித்த காவல்துறையினர் சில நபரின் பெயர்களை கேட்டு தெரிந்து அவர்களைத் தேடும் வேட்டையில் தொடங்கினர்.

காலை 7.30 மணி அளவில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பூக்கடை சத்திரம் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதும் காலையில் கத்தியுடன் ரவுடிகள் உலா வந்ததும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கஞ்சா போதையில் இருந்தனரா மற்றும் தொடர் குற்றம் புரிபவர்கள் என அவர்களை கைது செய்யும் பட்சத்தில் இச்செய்கை குறித்த விளக்கம் தெரிய வரும்.

சம்பவம் நடந்த இரு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி எளிது என்பது காவல்துறைக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது