ஊரடங்கு காலங்களில் சாலைவரி , இன்சூரன்ஸ் விலக்கு அளிக்க கோரி, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு காலங்களில் சாலைவரி , இன்சூரன்ஸ் விலக்கு அளிக்க கோரி, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஊரடங்கு காலங்களில் மோட்டார் வாகனங்களுக்கு சாலை வரி , இன்சூரன்ஸ் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க கோரி மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடாத வாகனத்திற்கு இன்சுரன்ஸ் வரியிலிருந்து விலக்கு, கொரோனா நிவாரண நிதியாக ரூ7500 வழங்கு,

டோல்கேட் கட்டண விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் நந்தகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க கோரியும் , மோட்டார் தொழிலையும் அதன் தொழிலாளர்களையும் பாதுகாத்தல் , 25 லட்சம் மோட்டார் தொழிலாளர்களை குடும்பங்களை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஆட்டோ, டூரிஸ்ட் வேன், கார் ஓட்டுனர் சங்க உறுப்பினர்கள் என . பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture