களக்காட்டூரில் 70 பேரின் பெயர் வாக்காளர்கள் பட்டியலிருந்து மாயம்: முற்றுகை போராட்டம்

களக்காட்டூரில் 70 பேரின் பெயர் வாக்காளர்கள் பட்டியலிருந்து மாயம்: முற்றுகை போராட்டம்
X

வாக்களர் பெயர் நீக்கியது குறித்து காஞ்சி கோட்ட காவல் துணை பணிப்பாளர் முருகனிடம் விளக்கும் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜு.

களக்காட்டூரில் வாக்காளர் பட்டியலில் 70 பேரின் பெயர் இல்லை, எப்படி மாயமானது என்று கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 கிராமங்கள் உள்ளது. இதில் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் , குருவிமலை உள்ளடக்கிய கிராம ஊராட்சியாகும். இங்கு 2202 ஆண் வாக்காளர்களும் 2318 பெண் வாக்காளர்களும் 4 திருநங்கைகள் என 4524 வாக்காளர்கள் உள்ளனர்

இவர்கள் வாக்களிக்கும் வகையில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு காலையிலிருந்து வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.

இதில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்களித்த நபர்கள் வாக்களிக்க இந்த முறை சென்ற போது இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி வாக்கு அளிக்க இயலாது என தெரிவித்துள்ளனர்.

இதில் சிலர் வாக்களிக்காமல் சென்ற நிலையில் இது தொடர்பான தகவல் அப்பகுதி அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜீக்கு தெரியவந்தது. இதுபோல் இக்கிராம ஊராட்சியில் 70க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக வாக்குசாவடி அலுவலரிடம் கேட்டபோது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் எனவும் பெயர் இல்லை எனில் தங்களால் எதுவும் செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது கறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது முறையற்ற பதில் வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி அவர்களுக்கு தகவல் வந்ததும் பேரில் அங்கு சென்ற போது வாக்காளர் அனைவரும் அவரை முற்றுகையிட்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்களித்த நாங்கள் இந்த முறை இவ்வாறு எங்களை கிராம ஊராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறி அவர்கள் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன்பின் காஞ்சிபுரம் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் மற்றும் ஊரக திட்ட முகாமை இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 30 வாக்காளர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.

இச்சம்பவத்தால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு கிராமமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil