காஞ்சிபுரம்: வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர்கள்!

காஞ்சிபுரம்: வரிசையில்  நின்று  தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர்கள்!
X

வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகி பல்வேறு மருத்துவமனைகளில் , வீடுகளிலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய , மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இரண்டு நாளாக பதினெட்டு வயது ஆரம்பம் முதல் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள சிறப்பு முகாம்கள் துவக்கப்பட்டது. இதில் குறிப்பாக இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் கொண்டு காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி சேர்த்துக் கொள்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் தடுப்பூசி முகாம் பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது . ஒவ்வொரு மையத்திலும் 150க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6594 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்தும் நேரடி முகாமுக்கு வந்து தடுப்பூசிகள் ஏற்றுக்கொண்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது...

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்