காஞ்சிபுரம் ஒன்றியம் ; ஊரக உள்ளாட்சி தேர்தலில் 82சதவீதம் வாக்குப் பதிவு
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 51283 ஆண் வாக்காளர்களும் , 54,927 பெண் வாக்காளர்களும் , 12 பேர் இதர வாக்காளர்கள் என 1,06,222 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.ப்
இந்நிலையில் இவர்கள் வாக்கு அளிக்க ஏதுவாக காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 196 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் 18 ஒன்றிய குழு உறுப்பினர்களும் 40 ஊராட்சி மன்றத் தலைவர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இன்று காலை 7 மணி அளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு துவங்கியது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 43133ஆண் வாக்காளர்களும் , 43526 பெண் வாக்காளர்களும் , 4 இதர பிரிவினர் என 86663 பேர் இன்று வாக்களித்தனர்.
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 84% ஆண் வாக்காளர்களும் , 79% பெண் வாக்காளர்களும் , 33 சதவிகித வாக்காளர்களும் என காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu