காஞ்சிபுரம்: ராமர், சீதா,லட்சுமணன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா

காஞ்சிபுரம்: ராமர், சீதா,லட்சுமணன் ஸ்ரீதேவி,  பூதேவியுடன் வீதி உலா
X

ஸ்ரீராம நவமியையொட்டி ராமர், சீதா,லட்சுமணன் மற்றும் தேவராஜ் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் உலா.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவராஜ் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன், படி ஏற்றம் கண்டு, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஸ்ரீ ராம நவமியை யொட்டி, இன்று காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், உற்சவர் ஸ்ரீ தேவராஜ சுவாமிகள் மலையில் இருந்து காலை ராமபிரான் சன்னதியில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ தேவராஜ ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இன்று மாலை திரு ஆபரணங்கள் மற்றும் பலவண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ராமபிரான் சன்னதி படிக்கட்டுகளில் படி ஏற்றம் கண்டார்.

அதன்பின் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருடன் கோயிலில் வலம் வந்து தேசிகர் சன்னதியில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாட வீதிகளில் பலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்