காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25.01 லட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25.01 லட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கருணை அடிப்படையில் ஆன வருவாய் துறை ஊழியர் குடும்பத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பணி ஆணை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், கட்டியாம்பந்தல், ஆதவப்பாக்கம், காரணை, சேர்ப்பாக்கம் மற்றும் மருதம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ.11,61,000/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட மேல்ஓட்டிவாக்கம், கூரம் கிராமத்தை சேர்ந்த 20 பயனாளிகளுக்கு ரூ 13,40,000/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வருவாய் துறையில் பணியின்போது மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் மாநில அளவில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது பெற்ற இளங்கோவன் மற்றும் அந்தோனி பால் ஆகிய இருவருக்கும் ரூ.25,000/-க்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்.

இதே போல் ஆட்சியர் செய்தி குறிப்பில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 03.09.2021 அன்று, 2021-2022 நிதி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முன்மாதிரியான பங்களிப்பு அளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 தனி நபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருதும் தலா ரூ. 1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்கப்படும் என அறிவித்தார்.

கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / பள்ளிகள் / கல்லுரிகள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனிநபர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு 2022 – 2023 ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி 2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு 4.பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் 5. நிலைத்தகு வளர்ச்சி 6. திடக்கழிவு மேலாண்மை 7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு 8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை 9.காற்று மாசு குறைத்தல் 10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை 11.சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு 12.கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை 13. இதர சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் ஆகியன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்து (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காஞ்சிபுரம் அவர்களை அணுகலாம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!