/* */

கந்த சஷ்டி 4ம் நாள் விழா: சம்பங்கி மாலை அணிந்து லட்சார்ச்சனை விழா

காஞ்சிபுரம் ஸ்ரீ குமரக்கோட்டம் என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கந்த சஷ்டி 4ம் நாள் விழா: சம்பங்கி மாலை அணிந்து  லட்சார்ச்சனை விழா
X

கந்த சஷ்டி சிறப்பு லட்சார்ச்சனையில் வள்ளி , தெய்வானை சமேத எழுந்தருளிய ஸ்ரீ சண்முகநாதர்

ஸ்ரீ காஞ்சி குமரகோட்டம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என அழைக்கப்படும் காஞ்சி குமரக்கோட்டம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீ சுப்பிரமணியர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மேலும், திருக்கோயில் வளாகத்தில் சண்முகநாதர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நிலையில் நாள்தோறும் பல்வேறு வேளைகளில் லட்சார்ச்சனை பெருவிழா சிவாச்சாரியார்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு லட்சார்ச்சனை பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.

கந்த சஷ்டி பெருவிழாவை ஒட்டி திருக்கோயிலை ஏராளமான பக்தர்கள் 108 முறை வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். இன்று முருகப்பெருமான் சம்பங்கி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா வரும் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு முருகன் திருத்தலங்களில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குன்றத்தூர் முருகன் திருக்கோயிலில் 50 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹார விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காஞ்சிபுரம் திருத்தணி வல்லக்கோட்டை குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சூரசம்ஹார விழாவை ஒட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

Updated On: 16 Nov 2023 11:45 AM GMT

Related News