கோயில் பிரச்னை: கூத்திரம்பாக்கம் கிராம மக்கள் கலெக்டர், எஸ்.பி.யிடம் மனு
கோயில் பிரச்னை தொடர்பாக கூத்திரம்பாக்கம் கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம், கூத்திரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:
கூத்திரம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களாகிய நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளோம். அனைத்து சாதியினருக்கும் சொந்தமான ஒரு முத்துமாரியம்மன் கோயில் கிராம நத்தம் புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள மாற்று சமூகத்தினர் சுமார் 500 குடும்பங்கள் அமைந்துள்ளது.
எங்கள் கிராமத்தில் 25 வருடங்களாக எங்களை புறக்கணித்து விட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்தி வந்தனர், திருவிழாவின் போது சாமியை எங்கள் வீதிக்கு கொண்டு வர அவர்கள் தொகையையும் அவர்கள் ஏற்றதில்லை. அனுமதித்ததில்லை. மேலும் எங்கள் பங்குத் அவர்கள் ஏற்றதில்லை.
கடந்த காலங்களில் முத்துமாரியம்மன் கோயில் கட்டுமான வேலையில் எங்களுடைய மூதாதையர் நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் விகிதம் வேலை செய்து பங்காற்றி உள்ளனர். சாமி சிலை செய்வதற்கும் ஒவ்வொரு வீட்டில் இருந்து பித்தளை மற்றும் செம்பு பொருட்களை கொடுத்துள்ளனர்.
பங்கு தொகையையும் கொடுத்துள்ளனர். இவையெல்லாம் பெற்றுக்கொண்டு ஆதிதிராவிடர் மக்களாகிய எங்களை வழிபாட்டில் நிராகரித்ததின் காரணமாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். ஆதிதிராவிட மக்களுக்கு வழிபாட்டு உரிமை உண்டு என்று நீதிமன்றத்தில் தீரப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு கடந்த 02.09.2018 அன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பு சமூகத்தினரையும் கூட்டி சமாதான பேச்சு வார்த்தைகள் (3 கட்டமாக) நடத்தியதில் பங்குத் தொகையையும் வாங்கிக் கொண்டு, வடக்கு நோக்கி ஆதிதிராவிடர் பகுதிக்குள் போகும் சாலையில் நடுவில் அடி தூரத்தில் சாமி வந்து நிற்கும். அங்கு வந்து தீப ஆராதனை காட்டி வழிபட்டுக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு இருதரப்பும் வந்தன. இரு தரப்பினரும் இந்த முடிவை மனதார ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 வருடமாக திருவிழா அவ்வாறே நடைபெற்றது. ஆனால் கடந்த 12.02.2023 அன்று கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை புதிதாக கட்டப் போகிறோம் என்று கிராமத்தில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் 16 பேர் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுத்து எங்களுக்கு தகவல் ஏதும் கொடுக்காமல் கோயிலை இடித்து தரைமட்டமாக ஆக்கிவிட்டனர்.
எங்களுடைய பங்குத் தொகையை வாங்கிக் கொண்டு எங்கள் கிராமத்தில் எந்த ஒரு பாகுபாடும் இல்லாத வகையில் கோயில் கட்டலாமே என்று கேட்டதற்கு, 'பங்குத்தொகை எல்லாம் வாங்க முடியாது. வேண்டுமானால் அன்பளிப்பாக கொடுங்கள்" என்று அவர்கள் சொல்லி அனுப்பிவிட்டனர்.
எனவே, எங்களுடைய உரிமையை நிலைநாட்டிட ஏற்றுக்கொள்வதோடு, எங்களையும் எங்கள் முழுமையாக பங்குத் தொகையை இணைத்துக் கொண்டு இந்தக் கோயிலை கட்டும் பணியை அவர்கள் மேற்கொள்ள தாங்கள் வழிவகை செய்து உதவுமாறு கேட்டுக் கொள்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனு அளிக்கும்போது விசிக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன், பாசறை செல்வராஜ், மக்கள் மன்ற நிர்வாகிகள் மகேஷ், ஜெசி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu