ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்..!

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முசரவாக்கம், திருப்புட்குழி ஆகிய கிராம ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்..!
X

திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் கலைச்செல்வி உடன் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார்.

காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புக்குழி, முசரவாக்கம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி ஊராட்சியில் ரூ.132.78 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணியினை பார்வையிட்டு, மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவப் பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, பிரசவ அறை, அறுவை சிகிச்சை அறை, உள் நோயாளிகள் பிரிவு போன்றவற்றை பார்வையிட்டு அவைகளின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


பின்பு திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 93.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து, பள்ளியில் உள்ள தொழில்நுட்ப வகுப்பறையினை பார்வையிட்டு மாணவ/மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.பள்ளியில் சமைக்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்கள்.

அதனை தொடர்ந்து திருப்புட்குழி பெருமாள் கோவில் தெருவில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிசி சாலையினையும், புதூரில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் 3.00 மீ தூரத்தில் சிமெண்ட் கான்கிரீட் பாலம் கட்டும் பணியினையும் பார்வையிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2023-24 கீழ் அண்ணா நகர் குறுக்கு தெருவில் ரூ.9.35 இலட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிசி சாலையினையும் ஆய்வு செய்தார்கள்.


மேலும் முசரவாக்கம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) கீழ் நடைபெற்று வரும் வீட்டு வசதி குடியிருப்பினையும் பார்வையிட்டு, அயோதிதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் 2023-24 கீழ் ரூ.6.30 இலட்சம் மதிப்பீட்டில் மாணிக்கம் நகரில் போடப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலையையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முசரவாக்கம் ஊராட்சியில் ரூ.35.45 இலட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி வரத்துக்கால்வாய் மற்றும் ரூ.36.36 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் 1600 மீ ஓடை கால்வாய் ஆழப்படுத்தும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 13 Feb 2024 12:15 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 2. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 3. மேலூர்
  அழகர்கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு: இந்து அமைப்புகள் எதிர்ப்பு
 4. நாமக்கல்
  நாமகிரிப்பேட்டையில் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
 5. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 7. காஞ்சிபுரம்
  பரந்தூர் விமான நிலையத்திற்கு 218 பேரிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை
 8. நாமக்கல்
  நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்
 9. ஈரோடு
  ஈரோடு டவுன் பகுதியில் நாளை மின்தடை
 10. சென்னை
  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 500 பேட்டரி பேருந்துகள் வாங்க ...